ஏட்டிக்குப் போட்டியாக ஒரு படம்
24 ஏப்,2017 - 11:07 IST
2015ம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் நடித்திருந்தார்கள். தற்போதுள்ள இரண்டு முன்னணி நடிகைகளின் பெயரில் அவர்கள் அனுமதியுடன் படம் வருவதால் ஏதோ புதுமை இருக்கிறது என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
படம் வெளிவந்த பிறகுதான் தெரிந்தது. படத்துக்கும் திரிஷா நயன்தாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. வெறும் டபுள் மீனிங் வசனங்கள், பெண்களை கிண்டல் செய்யும் காட்சிகள் நிரம்பி இருந்தது. படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்த்தாலும் படம் கல்லா கட்டி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. இந்த படத்தின் வசூல் வெற்றியை கருத்திக் கொண்டு இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், சிம்பு நடிக்க அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை அதே பாணியில் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் புதிய டீம் ஒன்று த்ரிஷா இருக்கும்போதே நயன்தாரா என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை எஸ்3 சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.எஸ் சினிமா என்ற நிறுவனம் வெளியிடுகிறது. சிவா என்பவர் இயக்குகிறார். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தலைப்பு வைக்க த்ரிஷா, நயன்தாராவிடம் அனுமதி பெற்றார்களா? என்றும் தெரியவில்லை.
0 comments:
Post a Comment