Sunday, April 23, 2017

ப.பாண்டி உணர்வை தொட்ட படம் : தங்கர்பச்சான் புகழாரம்


ப.பாண்டி உணர்வை தொட்ட படம் : தங்கர்பச்சான் புகழாரம்



23 ஏப்,2017 - 14:51 IST






எழுத்தின் அளவு:








நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ப.பாண்டி. ரசிகர்களிடன் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பற்றி இயக்குனர் தங்கபச்சான் பாராட்டி, கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ராஜ்கிரண் முதன்மை பாத்திரத்தில் நடித்து, நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் ப.பாண்டி திரைப்படத்தை பார்த்தேன். நெடுநாளைக்குப்பின் ஒரு பொழுது போக்கு திரைப்படம் படம் பார்ப்பவர்கள் அனைவரின் உணர்வையும் தொட்டுப்பார்த்து விட்டு சென்றிருக்கிறது.

ஒரு தகப்பனின் உணர்வையும்,அவர் மூலம் படம் பார்ப்பவர்களின் குற்றவுணர்வையும் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்தப்படம் தமிழ் சினிமா இதுவரைப்பேசாத சில பகுதிகளை பேசியிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் மனித உறவுகளிடம் நேர்முக உரையாடலையும்,சந்திப்பையும் முறித்துக்கொண்டு வரும் காலத்தில் தகப்பனின் மனதை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கடத்தி உறவை பலப்படுத்தியிருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க ஒரு திரைப்படம் ப.பாண்டி. படம் பார்த்த ஒவ்வொருவரும் அதன்பின் தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்வார்கள். ஒவ்வொருவரும் தவறாமல் அவரவர் குழந்தைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் தவறாமல் காண்பியுங்கள். எப்பொழுதுமே உணர்வுகளுக்குப்பின்தான் தொழில்நுட்பம் என்பதை இந்தப்படமும் உணர்த்துகிறது. தனுஷின் இந்த முயற்சியை படம் பார்த்த அனைவரையும் போல் நானும் பாராட்டி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment