Sunday, April 23, 2017

‘மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்’ சத்யராஜை பாராட்டிய கமல்


Kamalhassan Sathyaraj9 வருடத்துக்கு முன் காவிரி நீர் பிரச்னை தொடர்பான போராட்டத்தில் கன்னடர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார் சத்யராஜ்.


எனவே, ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தில் சத்யராஜ் நடித்துள்ளதால், அப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சத்யராஜ் மன்னிப்பு கேட்டு, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருநதார் என்பதை பார்த்தோம்.

சத்யராஜின் இந்த பதிவிற்கு நண்பர் கமல்ஹாசன் டிவிட்டரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

‘சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்ததற்கு வாழ்த்துகள் சத்யராஜ். மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

கமலின் பாராட்டுக்கு சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

Kamalhassan praises Sathyaraj for asking apologizes in Baahubali 2 issue

0 comments:

Post a Comment