சல்மான் படத்துடன் ரிலீஸாகும் ஷாரூக், அஜய் பட டிரைலர்கள்
27 ஏப்,2017 - 15:01 IST
சுல்தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்துள்ளார் சல்மான்கான். இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கிறது. சமீபகாலமாக ஒரு பிரபலத்தின் படத்துடன் மற்றொரு பிரபலத்தின் டிரைலர் வெளியாவது டிரெண்ட்டாகியுள்ளது. அந்தவகையில் இப்போது சல்மானின் டியூப்லைட் படத்துடன் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களின் டிரைலர்கள் வெளியாக உள்ளன. ஒன்று ஷாரூக்கான், இம்தியாஸ் அலி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டிரைலர், மற்றொன்று அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் பாத்சாகோ படம். இத்தகவலை சல்மானின் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி அமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment