இனி 2 வருடங்களுக்கு படம் ஒப்புக்கொள்ள மாட்டார் மோகன்லால்..!
24 ஏப்,2017 - 14:58 IST
மோகன்லாலுக்கு கடந்த 2015 செப்டம்பர் முதல் 2016 ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட ஒரு படம் கூட வெளியாகவே இல்லை.. அதே சமயம் கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இப்போதுவரை மோகன்லால் நடித்த 6 படங்கள் ரிலீசாகிவிட்டன.. இப்போது பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. இதை தொடர்ந்து பிருத்விராஜ் இயக்கத்தில் 'லூசிபர்' என்கிற படத்தில் நடிப்பார் என தெரிகிறது..
இந்த இரண்டு படங்களை தவிர ஒன்றிரண்டு படங்கள் வெறும் பேச்சு வாரத்தை அளவிலே தான் இருக்கின்றன. எது எப்படியோ அடுத்த வருடம் முதல் மகாபாரதம் படத்தில் நடிப்பதற்காக தேதிகளை ஒதுக்கி விட்டார் மோகன்லால். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் பீமன் கதாபாத்திரமாகவே வாழப்போகிறாராம்.. இரண்டு பாகங்களாக தயாராகவுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் 2020 ஆரம்பத்திலும் அதை தொடர்ந்து மூன்று மாதங்கள் கழித்து இரண்டாம் பாகமும் வெளியாகுமாம்.. ஆகையால் இந்தப்படத்தில் நடித்து முடியும் வரை, அதாவது 2019வரை மோகன்லால் வேறு எந்த புதிய படங்களையும் ஒப்புக்கொள்ள போவதில்லையாம்.
0 comments:
Post a Comment