சாயிஷாவை இப்போதே புக் பண்ணிடுங்க: தயாரிப்பாளர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்
23 ஏப்,2017 - 11:53 IST
ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள வனமகன் படத்தை விஜய் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 50வது படம். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம்ரவி பேசியதாவது:
நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டுந்தேன், ஆனா விஜய் சார சந்திச்சதுக்கு அப்புறம் நிச்சயம் நான் நல்லவன் இல்லைனு உணர்ந்தேன். நான் வனமகன்னா, இயக்குனர் விஜய் தெய்வ மகன். இனிமேல் சாயீஷா கால்ஷீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம், இப்போவே புக் பண்ணிருங்க. நான் செய்ற வேலை போரடிச்சிட கூடாதுனு தான் வித்தியாசமான கதைக்களங்கள்ல படம் பண்ணிட்டு இருக்கேன். அதை ரொம்ப சப்போர்ட் பண்ணி, வெற்றி தோல்விகள்ல கூட இருக்குற என் ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி என்றார் ஜெயம் ரவி.
இயக்குனர் விஜய் பேசியதாவது: என் முதல் படத்துக்கே நான் ஜெயம் ரவியை தான் தேடி போனேன். ஆனால் ஜெயம் ரவியை வைத்து படம் பண்ண 14 வருடங்கள் ஆகி விட்டது. இந்த படத்துக்காக இருக்கிற எல்லா காடுகளையும் தேடி போனோம். மதராசப்பட்டினம் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜை முயற்சி செய்தேன். 7 வருடங்களுக்கு பிறகு தான் அந்த வாய்ப்பும் அமைந்திருக்கிறது, அதுவும் அவரது 50வது படம் என் படமாக அமைந்தது எனக்கு பெருமை என்றார் இயக்குனர் விஜய்.
0 comments:
Post a Comment