மும்பைக்கு பறக்க முடிவு!
27 ஏப்,2017 - 04:52 IST
கேத்ரின் தெரசா நடித்த கடம்பன், இப்போது தான் வெளியாகியுள்ளது. படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கேத்ரின் முகத்தில் உற்சாகம் கொப்பளிக்கிறது. மேடம், தெலுங்கில் மிகவும் பிசியான நடிகையாகி விட்டது தான், இதற்கு காரணம். தமிழில், சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் இல்லை என்றாலும், தெலுங்கில், ராணாவுடன், நேனே ராஜா நேனே மந்திரி என்ற படத்திலும், கவுதம நந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து, தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப் போவதாக கூறியுள்ள கேத்ரின், அப்படியே, பாலிவுட்டிலும் காலுான்ற திட்டமிட்டுள்ளாராம்.
Advertisement
0 comments:
Post a Comment