சாலையை ஆக்கிரமித்த நடிகர் சங்கம்?: குடியிருப்பு வாசிகள் புகார்
27 ஏப்,2017 - 09:59 IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் 18 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில்தான் பிரமாண்ட நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி பூஜை எல்லாம் நடந்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடம் 14 கிரவுண்ட்தான். மீதமுள்ள 4 கிரவுண்ட் சாலைக்காக ஒதுக்கப்பட்டது என்று அந்த பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீரங்கன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
"நடிகர் சங்கத்திற்கு சொந்தமானது 14 கிரவுண்ட் நிலம்தான். முன்பு அபிபுல்லா சாலைக்கும், நடிகர் சங்க இடத்துக்கு பின்னால் உள்ள பிரகாசம் சாலைக்கும் இணைப்பு சாலை ஒன்று 33 அடி அகலத்தில் இருந்தது. முன்பு இதனை நடிகர் சங்கம் சாலையாக பாவித்து வந்தது. காலப்போக்கில் சாலையை ஆக்கிரமித்து அவர்களது சொந்த இடமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து இதற்கு முன் இருந்த நடிகர் சங்க நிர்வாகத்திடம் பேசினோம். ஆனால் அது பலனிக்கவில்லை. இதனால் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளோம். விரைவில் வழக்கு தொடர்வோம்" என்கிறார் ஸ்ரீதரன்.
"இந்த பிரச்சினை பல வருடங்களாக இருந்தது. ஆனால் நடிகர் சங்க இடத்திற்கான பட்டா பக்காவாக உள்ளது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டிடத்திற்கு பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதனை நாங்களும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்" என்கிறது நடிகர் சங்க வட்டாரம்.
0 comments:
Post a Comment