Saturday, April 29, 2017

கொச்சி மல்டிபிளக்ஸில் 'பாகுபலி-2' சிக்கல் தீர்ந்தது..!


கொச்சி மல்டிபிளக்ஸில் 'பாகுபலி-2' சிக்கல் தீர்ந்தது..!



29 ஏப்,2017 - 16:34 IST






எழுத்தின் அளவு:








ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'பாகுபலி-2' நேற்று உலகெங்கிலும் ரிலீஸானது.. கேரளாவிலும் இந்தப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். கிட்டத்தட்ட 300 தியேட்டர்களுக்கு மேல் கேரளாவில் வெளியானாலும் கொச்சியில் உள்ள பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் மட்டும் நேற்று காலையில் படம் திரையிடப்படவில்லை.. ஏற்கனவே காலை, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லாத நிலையில், முற்பகல் முதல் காட்சியும் ஆரம்பிக்கப்படாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

நேரம் செல்லசெல்லத்தான் விநியோகஸ்தர்களுக்கும் பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனத்துக்குமான பங்கு தொகை உடன்பாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக 'பாகுபலி-2' திரையிடுவதில் சிக்கல் எழுந்திருப்பது தெரியவந்தது.. ரசிகர்களின் ரகளை அதிகமானதை தொடர்ந்து படத்தை கேரளாவில் வெளியிட்ட குளோபல் மீடியா நிறுவனமும் தியேட்டர் நிர்வாகமும் இணைந்து பேசி சுமூகமான உடன்பாட்டிற்கு வந்தன. இதை தொடர்ந்து பி.வி.ஆர் சினிமாஸில் பாகுபலி-2' மாலை முதல் காட்சிகள் தொடங்கின.


0 comments:

Post a Comment