ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் படம் ‘2.0’. நவீன தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் கதை, காட்சிகள் உள்பட அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்ட காட்சிகளின் வடிவமைப்பு போன்ற பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு எவ்வாறு உருவானது என்பது பற்றி தெரிவித்த எமிஜாக்சன்…
“இந்த படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்கள். அங்கு அவர்களை ‘மோல்ட்’ எடுத்து அதன்பிறகு, அதற்கு ஏற்ப ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான தோற்றம் இருக்கும்படி ஆடைகள் உருவாக்கப்பட்டன. இதில் இயக்குனர் ஷங்கர் அதிக அக்கறை செலுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment