Sunday, April 23, 2017

மீண்டும் சீரியல் நாயகனான சஞ்சீவ்


மீண்டும் சீரியல் நாயகனான சஞ்சீவ்



23 ஏப்,2017 - 11:09 IST






எழுத்தின் அளவு:








சின்னத்திரையில் மெட்டி ஒலி, அண்ணாமலை, நம்பிக்கை, அகல்யா, மனைவி, திருமதி செல்வம், கலசம், சிவசக்தி, துளசி உள்பட பல சீரியல்களில் ஹீரோ, வில்லன் என மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல், சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி ஆகிய படங்களில் விஜய்யின் நண்பனாக நடித்துள்ள சஞ்சீவ், என் மனவானில், புதிய கீதை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக சின்னத்திரையில் பிரபலமானவர்கள் பலரும் சினிமாவில் ஹீரோவாகிக் கொண்டிருப்பதால், சஞ்சீவுக்கும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட கடந்த ஒரு வருடமாக எந்த சீரியலிலும் நடிக்காமல், சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனால் தற்போது யாரடி நீ மோகினி தொடர் மூலம் மீண்டும் தனது சீரியல் பயணத்தை தொடங்கி விட்டார் சஞ்சீவ்.


0 comments:

Post a Comment