Tuesday, April 25, 2017

டைரக்டர் பாலாவை பொறாமைப்பட வைத்த நடிகர்-டைரக்டர்









டைரக்டர் பாலாவை பொறாமைப்பட வைத்த நடிகர்-டைரக்டர்



25 ஏப்,2017 - 10:54 IST






எழுத்தின் அளவு:








சினிமாவில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டவர் பாலா. தான் நினைத்ததை சுதந்திரமாக எடுக்கக்கூடியவர். முக்கியமாக பாலா இயக்கும் படங்களில் நடித்தால் நடிப்பில் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று நடிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா போன்ற நடிகர்கள் பாலா படங்களில் நடித்த பிறகுதான் நடிப்பில் பளிச்சிட்டார்கள்.

முக்கியமாக யதார்த்த கதைகளை படமாக்கும் பாலா, தனது படங்களில் நடிப்பவர்களையும் யதார்த்த கேரக்டர்களாக நடிக்க வைப்பார். அதேபோல், சினிமா மேடைகளிலும் தனது மனதில் பட்டதை ஒழிவுமறைவில்லாமல் யதார்த்தமாக பேசுவார். அந்த வகையில், வனமகன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பாலா, என்னிடம் ஒரு ஐம்பது கெட்டப்பழக்கம் இருக்கிறது என்றால், ஜெயம்ரவி மற்றும் ஏ.எல்.விஜய்யிடம் எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஒரு கெட்டப்பழக்கமாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்படிப்பட்ட நல்லப்பிள்ளைகளைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. அதேசமயம் பெருமையாகவும் உள்ளது. இந்த நல்ல பிள்ளைகளை பெற்றதற்காக அவர்களின் பெற்றோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.




Advertisement








விஜய்யின் தீபாவளி செண்டிமென்ட்விஜய்யின் தீபாவளி செண்டிமென்ட் பொட்டு படத்தில் அம்ரேஷின் அதிரடிப் பேய் பாட்டு! பொட்டு படத்தில் அம்ரேஷின் அதிரடிப் ...










0 comments:

Post a Comment