Friday, April 21, 2017

வில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ராமமூர்த்தி!


வில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ராமமூர்த்தி!



21 ஏப்,2017 - 15:37 IST






எழுத்தின் அளவு:








மதயானைக்கூட்டம், கொம்பன், பாயும் புலி, ரஜினி முருகன், சேதுபதி, கிடாரி ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அந்த படங்கள் வெற்றி பெற்றதோடு அவரது நடிப்பும் பேசப்பட்டதால், கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஆக்டராகி விட்டார் வேல ராமமூர்த்தி. மேலும், அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, அப்பா போன்ற படங்களில் சென்ட்டிமென்ட்டான வேடங்களில் நடித்ததால், அதன்பிறகு அவரை யாரும் வில்லனாக பார்க்கவில்லை. அப்பா வேடங்களுக்கே அதிகமாகி புக் பண்ணி வருகின்றனர்.

அந்த வகையில், கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் வனமகன், சமுத்திரகனியின் தொண்டன் ஆகிய படங்களிலும் அப்பா வேடங்களில்தான் நடித்திருக்கிறார். ஆக, தற்போது கோலிவுட்டில் பிசியான அப்பா நடிகராகி விட்டார் வேல ராமமூர்த்தி.


0 comments:

Post a Comment