Monday, April 24, 2017

கமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்


actor sibirajசைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் சத்யா படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.


இதே தலைப்பில் உருவான படத்தை கமல் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

சத்யா என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடிக்கின்றனர்.

சத்யராஜின் குடும்ப நிறுவனமான நாதம்பாள் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் சிபிராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ரங்கா என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இது 1982ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பாகும்.

நாளைய இயக்குனர் புகழ் வினோத் இயக்கவுள்ள இப்படத்தில் நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

ஜீவா, ஹன்சிகாவுடன் சிபிராஜ் நடித்த போக்கிரி ராஜா படத்தலைப்பும் ரஜினி படத்தலைப்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment