Thursday, April 27, 2017

தனுஷின் ஹாலிவுட் பட சூட்டிங் தகவல்கள்


Dhanush hollywood movie The Extraordinary Journey of the Fakir updatesகோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் தனுஷ், முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.


ஆனால் இப்படத்தின் தகவல்கள் மட்டுமே வந்த நிலையில், இதன் சூட்டிங் குறித்த தகவல்கள் இல்லை.

இந்நிலையில், அதற்கான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் வருகிற மே 14 முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பகிர் எனும் கேரக்டரை மையப்படுத்தியே இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடியாக தயாராக உள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ (ஆர்ட்டிஸ்ட் திரைப்படம்) முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanush hollywood movie The Extraordinary Journey of the Fakir shooting updates



0 comments:

Post a Comment