அஜித் பிறந்தநாளுக்கு கேரள ரசிகர்களின் அசத்தல் கிப்ட்..!
28 ஏப்,2017 - 15:01 IST
மே-1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் இங்கே ரசிகர்கள் வழக்கம்போல கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் 1999ல் அஜித்-ஷாலினி நடித்த அமர்க்களம்' படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி அஜித்தின் பிறந்தநாள் பரிசாக இன்று ரிலீஸ் செய்துள்ளார்கள்.. இதே கேரளாவை பொறுத்தவரை அஜித்தைவிட விஜய்க்குத்தான் ரசிகர்கள் அதிகம் என்றாலும், அங்கே உள்ள கேரள ரசிகர்களும் 'தல' பிறந்தநாளுக்கு நாமும் ஏதாவது மாஸ் காட்டவேண்டும் என கோதாவில் குதித்துள்ளார்கள்.
இதற்காக எர்ணாகுளத்தை சேர்ந்த 'ஆல் கேரளா அஜித்குமார் பேன்ஸ்' மாவட்ட ரசிகர் மன்றத்தினர் அஜித்துக்கு ஸ்பெஷல் கிப்ட் தர முடிவு செய்துள்ளனர். இதற்காக 'ஆசைநாயகன் தல' என்கிற மியூசிக் ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆல்பத்தை நாளை மறுதினம் (ஏப்-30) இதை வெளியிட இருக்கிறார்கள்.. அகில் செம்மஞ்சேரி என்பவர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்திற்கு ஆசிம் சலீம் என்பவர் இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment