Tuesday, April 25, 2017

பாகுபலி-2 ஹிந்தியில் மட்டும் 3000 தியேட்டர்களில் ரிலீஸ்


பாகுபலி-2 ஹிந்தியில் மட்டும் 3000 தியேட்டர்களில் ரிலீஸ்



25 ஏப்,2017 - 13:40 IST






எழுத்தின் அளவு:








இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி-2 வெளியான ஒரு சில நாட்களே உள்ளன. ஆகையால் படத்தை ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாவதவாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாகுபலி-2 ஹிந்தியில் மட்டும் 3000 தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. பாலிவுட் படங்கள் பிறமொழி படம் ஒன்று இவ்வளவு தியேட்டரில் ரிலீஸாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். மேலும் இப்படி அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாவதால் பாகுபலி-2 படத்தின் முதல்நாள் வசூல் மட்டும் சுமார் ரூ.20 கோடியை தாண்டும் என விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். விநியோகஸ்தர்களின் கணிப்பை பாகுபலி-2 பூர்த்தி செய்யுமா...? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.


0 comments:

Post a Comment