தனுஷ் பாணியில் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய்..?
29 ஏப்,2017 - 16:46 IST
தமிழில் உள்ள இளம் முன்னணி நடிகர்களுக்கு மலையாள சினிமா மற்றும் அதன் கதைகள் மீதான ஆர்வம் இருந்தாலும் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிப்பது என்றால் தயங்கவே செய்கிறார்கள். தனுஷ் மட்டும் போனால் போகிறது என ஒரு காரியம் செய்தார். விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஒப்பிட்டால் தனுஷுக்கு மலையாள திரையுலகில் ரசிகர்களின் வரவேற்பு ஒரு படி கம்மிதான். ஆனால் மலையாளத்தில் மம்முட்டி-திலீப் நடித்த 'கம்மத் & கம்மத்' படத்தில் நடிகர் தனுஷாகவே சில நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் தனுஷ்..
அதாவது மம்முட்டி-திலீப் ஆரம்பித்த புதிய ஹோட்டலை திறந்து வைக்க நடிகர் தனுஷ் வருவதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.. தற்போது இதே பாணியில் விஜய்யும் மலையாளத்தில் ஒரு படஹ்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்யாகவே நடிக இருக்கிறார் என மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.. அதற்கேற்ற மாதிரி படத்தன் டைட்டிலும் கதையும் படத்தில் விஜய்யின் தேவை இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
ஆம்.. படத்தின் பெயர் 'போக்கிரி' சைமன்'.. இதில் தீவிரமான விஜய் ரசிகராக நடிக்கிறார் நடிகர் சன்னை வெய்ன்.. கதைப்படி கேரளாவிற்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் வருவது போலவும், அவரிடம் போக்கிரி சைமனான சன்னி வெய்ன் முண்டியடித்துக்கொண்டு சந்தித்து போட்டோ எடுத்து பாராட்டு வாங்குவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றனவாம். அதனால் விஜய்யை இந்தப்படம் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்குள் இழுத்து விட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார்களாம்.
0 comments:
Post a Comment