Thursday, April 27, 2017

நானும் கிச்சன் கில்லாடிதான்: சொல்கிறார் சாய் சக்தி


நானும் கிச்சன் கில்லாடிதான்: சொல்கிறார் சாய் சக்தி



27 ஏப்,2017 - 12:37 IST






எழுத்தின் அளவு:








பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் சாய் சக்தி. இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முக்கிய காரணம் நானும் கிச்சன் கில்லாடிதான் என்கிறார் சாய்சக்தி.

அதுகுறித்து அவர் கூறுகையில், சூப்பர் சமையல் நிகழ்ச்சியில் கடந்த 6 மாதமாக பங்கேற்று வருகிறேன். சீரியல் நடிகரான நான் இதில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம், சமையல் கலை எனக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் என் மனைவியை ஓரங்கட்டி விட்டு நானே சமையல் கில்லாடியாகி விடுவேன். விதவிதமாக அவர்களுக்கு சமைத்து கொடுப்பேன்.

முக்கியமாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை பாரம்பரிய உணவுகளை நான் சமைப்பேன். சிறு வயதில் இருந்தே எனக்கு சமையல் கலையில் ஆர்வம் இருப்பதால், இணையதளத்தில் உணவுகள் பற்றிய செய்முறைகளை தெரிந்து கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்துக்கொடுப்பேன். நம்முடைய தமிழ் நாட்டு பாரம்பரிய உணவுகள் என்றால் மிகச்சிறப்பாக சமைப்பேன் என்கிறார் நடிகர் சாய் சக்தி.


0 comments:

Post a Comment