Tuesday, April 25, 2017

சறுக்கிய ஜெயராம்.. சாதித்த பிஜூமேனன்..!


சறுக்கிய ஜெயராம்.. சாதித்த பிஜூமேனன்..!



25 ஏப்,2017 - 16:28 IST






எழுத்தின் அளவு:








கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஜெயராம் நடித்த சத்யா' மற்றும் பிஜூமேனன் நடித்த 'ரக்சதிகாரி பைஜூ' என இரண்டு படங்கள் வெளியாகின. ஜெயராமுக்கு கடந்த வருடம் வெளியான 'ஆடுபுலியாட்டம்' சூப்பர்ஹிட்டான நிலையில் ஒரு வருடம் கழித்து 'சத்யா' வெளியாகி உள்ளது. பிஜூமேனனுக்கோ கடந்த வருடம் வெளியான மூன்று படங்களில் 'அனுராக கரிக்கின் வெள்ளம்' படம் மட்டும் டீசன்டான வெற்றியை தந்திருந்தாலும், ஒரு ஹீரோவாக அவருக்கு கடந்த வருடம் மிகப்பெரிய ஏற்றம் இல்லாத நிலையில் தான் இந்த 'ரக்சதிகாரி பைஜூ' படம் வெளியானது..

அந்தோ பரிதாபம்.. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஜெயராமின் சத்யா' இரண்டு நாட்கள் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிக்க தவறியது.. சத்யா வெளியான தியேட்டர்களில் மளமளவென அந்தப்படத்தை தூக்கிவிட்டு, 'பாஸ்ட் அன்ட் பியூரியஸ்-8'க்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.. சென்னையில் இந்தப்படம் வெளியாகவே இல்லை.. அதேசமயம் பிஜூமேனனின் 'ரக்சதிகாரி பைஜூ ஒப்பு' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனிபோடும் விதமாக அமைந்ததால் ரசிகர்களின் கூட்டம் அந்தப்பக்கம் படையெடுக்க துவங்கியுள்ளது.. 'வெள்ளிமூங்கா' படத்துக்குப்பின் இந்தப்படம் பிஜூமேனனுக்கு இன்னொரு சோலோ ஹிட்டாக அமையும் என சொல்லப்படுகிறது.


0 comments:

Post a Comment