ஹாலிவுட் படத்தினால் மாரி-2 வை தள்ளி வைத்த தனுஷ்
23 ஏப்,2017 - 10:22 IST
காதலில் சொதப்புவது எப்படி, வாய் மூடி பேசவும், மாரி ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இதில் மாரி படம் வெற்றி பெற்றதால், அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கதையை ரெடி பண்ணுமாறு பாலாஜி மோகனிடம் சொன்னார் தனுஷ். மேலும், முதல் பாகத்திற்கான கதையில் முடிவு சொல்லிவிட்டதால், மாரி-2 வை இன்னொரு மாறுபட்ட கதைக்களத்தில் இயக்கு வதற்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி விட்டார் பாலாஜிமோகன். மேலும், புதிய கதைக்களம் என்பதால் முதல் பாகத்தில் நடித்தவர்களை மாற்றுகிறார். குறிப்பாக, காஜல்அகர்வால், அனிருத் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இல்லை.
இந்நிலையில், மாரி-2 படத்தை ஜூன் மாதத்தில் தொடங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வடசென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ், ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிப்பதால், கால்சீட் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் ஜூன் மாதத்தில் ஹாலிவுட் படத்தில், தான் நடிக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் முடித்துக்கொடுக்கயிருக்கும் தனுஷ், அதன்பிறகு ஜூலையில் மாரி-2 படத்தை தொடங்கலாம் என்று பாலாஜிமோகனிடம் கூறியிருக்கிறாராம். அதனால், ஜூன் மாதத்திற்காக தயாரான அவர் இப்போது ஜூலையில் படப்பிடிப்புக்கு செல்ல பிளான் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment