கமலுக்கு பிரதமர் தலைமையில் விழா நடத்த விஷால் கோரிக்கை
24 ஏப்,2017 - 11:59 IST
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று பதவி ஏற்ற பிறகு பல அதிரடி திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பைரசியை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர்கள், அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்போவதாக கூறுகின்றனர். மேலும், தியேட்டர்களில் படங்களை கேமரா வைத்து எடுப்பவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் தரப்படும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து, இணையதளங்களில் பைரசி பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், வெங்கைய்யா நாயுடுவிடம் மற்றொரு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதாவது பிரான்ஸ் நாட்டின் சார்பில் கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கமலை பாராட்டும் வகையில் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட விழா ஒன்றை நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் தலைமையில் நடக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும் என்று வெங்கைய்யா நாயுடு கூறியிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment