அஜித் படத்தில் மகாபாரத பீஷ்மர் ஆரவ் செளத்ரி
28 ஏப்,2017 - 11:36 IST
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இதில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கிய வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படம் இந்தி சினிமா ரசிகர்களையும் கருத்தில் கொண்டு தயாராகி வருவதால், விவேக் ஓபராய்க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
மேலும், இப்படத்திற்கு இன்னொரு வில்லன் கேரக்டர் தேவைப்பட்டபோது, தென்னிந்தியாவைச் சேர்ந்த சில நடிகர்கள் நடிப்பதற்கு போட்டி போட்டனர். ஆனால், அந்த வில்லனும் பாலிவுட் சினிமாவை சேர்ந்தவராக இருந்தால் இந்தி வியாபாரத்திற்கு பலமாக இருக்கும் என்று இப்போது ஆரவ் செளத்ரி என்பவரை இரண்டாவது வில்லனாக்கியிருக்கிறார்கள். பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர், மகாபாரதம் தொடரில் பீஷ்மர் வேடத்தில் நடித்து பேசப்பட்டவர். ஆக, இந்த விவேகம் படத்தில் இந்தி ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான விவேக் ஓபராய், ஆரவ் செளத்ரி, காஜல்அகர்வால், அக்சராஹாசன் என நான்கு பேர் உள்ளனர்.
0 comments:
Post a Comment