இணையதளங்களில் லீக்கானது பாகுபலி-2
28 ஏப்,2017 - 10:09 IST
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாகுபலி 2 முழுப்படமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டாப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை சினிமா ரசிகர்களிடம் அதிக அளவில் ஏற்படுத்திய படம் பாகுபலி 2. இந்தியாவிலேயே அதிக செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக தொகைக்கு விற்பனையானதும், அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை கொண்ட இந்திய திரைப்படமும் இது தான். டில்லியில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2400-க்கும், ஆந்திரா, தெலுங்கானாவில் கள்ளச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.5000 வரைக்கும் விற்கப்பட்டுள்ளது.
பல தடைகள், எதிர்ப்புகளை தாண்டி இப்படம் இன்று (ஏப்ரல் 28) இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீசானது. சென்னையில் பட தயாரிப்பாளர்கள் மற்றும் பட விநியோகஸ்தர்கள் இடையேயான பிரச்னை காரணமாக தமிழில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதுவும் சுமூகமாக முடிக்கப்பட்டு தற்போது படம் ரிலீஸாகியுள்ளது.
நெட்டில் லீக்கான பாகுபலி 2 : இதற்கிடையில் இணையதளங்களில் பாகுபலி 2, முழுப்படமும் வெளியாகி உள்ளது. சட்ட விரோதமாக முழுப்படமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment