திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளரும், ‘நடிகவேல்’ எம் ஆர் ராதாவின் பேரனுமான அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இப்படத்தில் ஜீவா – ஸ்ரீதிவ்யா – சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராதாரவி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, கோவை சரளா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி மற்றும் இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற மே 19 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தை ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனத்தின் சார்பில் அட்லீ, ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்’ இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக நாயகன் கமலஹாசன் படத்தின் பாடல்களை வெளியிட்டார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் சிறப்பு என்னவென்றால், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களை முன்னணி நடிகர்கள் பாடிக் கொடுத்துள்ளனர். நடிகர் சிம்பு, ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், பிரேம்ஜி அமரன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பாடியுள்ளனர். மேலும் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனும் ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment