கார் விபத்தில் வங்காள நடிகை மரணம்: நடிகர் படுகாயம்
30 ஏப்,2017 - 15:02 IST
பிரபல வங்காள நடிகை சோனியா சிங் சவுகான். பிரபல பெங்காலி டி.வி. தொகுப்பாளரான சோனியா பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அவர் தற்போது பெங்காலி சேனல் ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பெங்காலி நடிகர் விக்ரம் சட்டர்ஜி கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக கொல்கத்தாவில் இருந்து புறநகரில் உள்ள ஸ்டூடியோவிற்கு சோனியாவும், விக்ரம் சட்டர்ஜியும் காரில் சென்று கொண்டிருந்தனர். கொல்கத்தாவின் லேக்மால் என்ற இடத்தில் கார் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் செல்பவர்கள் மீது மோதிவிடமால் இருக்க காரை திருப்பியல் அது நிலை நடுமாறி கவிழ்ந்தது. இதில் சோனியா, விக்ரம் சட்டர்ஜி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சோனியா ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். விக்ரம் சட்டர்ஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் பெங்காலி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment