பைக் திருடனாக நடிக்கிறார் விக்ரம்
28 ஏப்,2017 - 10:53 IST
ஜெமினியைத் தொடர்ந்து ரவுடியாக விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கி வரும் இந்த படத்தில் தமன்னா, ஸ்ரீபிரியங்கா, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இந்த படத்திலும் தனது சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், இந்த படத்தில் விக்ரம் வழக்கமான வடசென்னை ரவுடிகள் போன்று இல்லாமல் மேல்தட்டு ரவுடியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த படத்தில் விக்ரம் முக்கால்வாசி படத்தில் லுங்கி, பனியன் அணிந்து லோ கிளாஸ் ரவுடியாகத்தான் நடிக்கிறாராம். கதைப்படி, அவர் ஒரு பைக் திருடன். புதிய ரக பைக்குகளை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எப்படி திருடுகிறார் என்பது தான் கதை. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை பின்னர் எப்படி எதிர் கொள்கிறார் என்பது க்ளைமாக்ஸ். அந்த வகையில், தனது இதற்கு முந்தைய இமேஜ்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அதிரடி ரவுடியாகவே உருவெடுத்துள்ளாராம் விக்ரம்.
0 comments:
Post a Comment