‛இலை' சுவாதிக்கு திருமணம்
24 ஏப்,2017 - 11:04 IST
மலையாளத்தில் சூ சூ சுதி வாதிமீகம், தமிழில் சமீபத்தில் வெளிவந்த இலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி நாராயணன். சுவாதி ஒரு ஆயுர்வேத டாக்டர். தற்போது சுவாதிக்கும், கப்பல் என்ஜினீயர் யாஷின் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி திருமணம் நடக்கிறது.
"இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். நடனம் தான் உயிர், அடுத்து மருத்துவம், மலையாளத்தில் நடித்த படமும், தமிழில் நடித்த படமும் உயர்ந்த நோக்கத்தை கொண்டது. தமிழில் நடித்த இலை படத்தில் 10 வகுப்பு படிக்கும் ஒரு மாணவியாக நடித்தேன். இது பெண் கல்வியை வலியுறுத்தும் அற்புதமான படம். திருமணத்திற்கு பிறகு திருச்சூரில் நடன பள்ளி ஒன்று அமைக்கும் திட்டம் இருக்கிறது, இடையில் நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவிலும் நடிப்பை தொடருவேன்" என்கிறார் ஸ்வாதி.
0 comments:
Post a Comment