மே 14 முதல் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்
26 ஏப்,2017 - 18:18 IST
கோலிவுட்டில் வெற்றிக்கொடிய நாட்டிய தனுஷ், அடுத்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் வெற்றிக்கனியைப் பறித்தவர், அடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வந்ததுமே அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அந்த பரபரப்பு அடங்கியதும், அது பற்றி புதிய தகவல் எதுவும் வரவில்லை. தனுஷ் நடிப்பில் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அடுத்தது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகும். ஆனால் அதற்கு மாறாக தமிழ்ப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ப. பாண்டி வெளியானதும் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. பதில் தெரியாமலேயே இத்தனை நாட்களாக இருந்து வந்த இந்தகேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. தனுஷ் நடிக்கும் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மே 14 முதல் துவங்கவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடியாக தயாராக உள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ (ஆர்ட்டிஸ்ட் திரைப்படம்) முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல். டில்லியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பகிர் எனும் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment