கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் -ரேவதி
30 ஏப்,2017 - 11:03 IST
ஒஸ்தி, அம்மா கணக்கு படங்களில் நடித்த மாஜி ஹீரோயின் ரேவதி, இந்தியில் 2013ல் கங்கனா ரணாவத் நடித்து வெளியான குயின் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக கூறப்பட்டது. நடிகை சுகாசினி வசனம் எழுதும் அப்படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கயிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டது. ஆனால் பின்னர் அந்த படம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் ராஜ்கிரணின் காதலியாக நடித்தார் ரேவதி. அப்படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதனால் தற்போது ரேவதியை தேடி சில புதிய படங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படி தன்னை தேடிவந்த டைரக்டர்களிடம், கதையை முதலில் சொல்லிவிட்டு செல்லுங்கள். சிறிது கால அவகாசத்துக்குப் பிறகுதான் இந்த கதையில் நான் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி நான் முடிவு சொல்வேன் என்று கூறி அனுப்புகிறார் ரேவதி.
முக்கியமாக, எனக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்தாலும் நான் நடிக்கிற கதாபாத்திரம் என்னையும் ரசிகர்களையும் கவர வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் ரேவதி.
0 comments:
Post a Comment