பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஏமாற்றிய மோகன்லால்-மம்முட்டி..!
25 ஏப்,2017 - 16:30 IST
மிகப்பெரிய அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டைத்தான் காட்டுகிறது கடந்தவார கேரள சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்.. குறிப்பாக மம்முட்டி, மோகன்லால் இருவரின் சமீபத்திய படங்கள் இரண்டுமே வரவேற்பு ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஆவரேஜுக்கும் கீழே தான் இருக்கின்றன என்பதை அந்தப்படங்களின் வசூல் நிலவரங்கள் அட்சர சுத்தமாக எடுத்துகாட்டுகின்றன.
கடந்த வருடம் வெளியான மோகன்லாலின் புலி முருகன் படம் 17 நாட்களில் 45 கோடி ரூபாய் வசூலித்ததை பார்த்த வாய்பிளந்த பாக்ஸ் ஆபீஸ், இப்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மேஜர் ரவி இயக்கத்தில் வெளியான மோகன்லாலின் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படத்தின் 16 நாள் வசூலே மொத்தம் 6.4 கோடி தான் என்கிற செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளது.
அதேபோல ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடிப்பில் மே-12ல் வெளியான 'புத்தன் பணம்' படம் 10 நாட்களில் 6.48 கோடி ரூபாய் வசூலித்து மோகன்லால் படத்துக்கு தான் ஏதோ பரவாயில்லை என நிரூபித்தாலும் இதுவே ஆவரேஜூக்கும் கீழான வசூல் தான் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் நிலவரம். ஆனால் 'புத்தன் பணம்' படத்திற்கு 12 நாட்களுக்கு முன்னதாக மம்முட்டி நடிப்பில் வெளியான 'தி கிரேட் பாதர்' படம் நான்கே நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்திருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்..
ஆக மம்முட்டி, மோகன்லால் இருவரின் கடைசி வெளியீடான இரண்டு படங்களையும் கவனித்து பார்த்தால், ஏற்கனவே கூட்டணி அமைத்த பிரபல இயக்குனர்கள் என்பதால் கதை தேர்வில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
0 comments:
Post a Comment