ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படம் இந்தியாவில் மட்டும் 6,500 தியேட்டர்களிலும் உலகம் முழுவதும் 9000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
தமிழில் மட்டும் 650திரையரங்குகளில் வெளியிடதிட்டமிடப்பட்டிருந்தது
ஆனால், தமிழகத்தில் மட்டும் தற்போது வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பட விநியோகஸ்தர் மற்றும் படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் பஞ்சாயத்து நீடித்து வருகிறது.
இதனால் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை சிறப்பு காட்சி மட்டுமே இந்த பிரச்சினையுள்ளதாகவும், பகல் 11 மணி காட்சியில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Baahubali 2 release issue
0 comments:
Post a Comment