Thursday, April 27, 2017

ரூ.5000-க்கு விற்கப்படும் பாகுபலி-2 டிக்கெட்


ரூ.5000-க்கு விற்கப்படும் பாகுபலி-2 டிக்கெட்



27 ஏப்,2017 - 17:50 IST






எழுத்தின் அளவு:








2015ம் ஆண்டில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்தி இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக பாகுபலி-2 உருவாகி இருக்கிறது. இந்திய சினிமாவே வியக்கும் பாகுபலி-2 நாளை உலகம் முழுக்க சுமார் 7000 முதல் 8000 தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. இதற்கான முன்பதிவு டிக்கெட் இந்தியா முழுக்க பரபரப்பாக நடந்து வருகிறது. பலர் நேரில் சென்று டிக்கெட் வாங்க குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் பாகுபலி-2 டிக்கெட் வாங்க 3 கிமீ தூரத்திற்கு வரிசையாக நின்றனர். இப்படி இந்தப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால் சிலர் இதை தவறாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் டிக்கெட்டை விலையை ஏகத்துக்கும் விற்பனை செய்து வருகின்றன. குறைந்தது ரூ.1000, ரூ.2000 முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

5 முதல் 6 ஷோ : பொதுவாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில தியேட்டரில் நாள் ஒன்றுக்கு 4 காட்சிகள் மட்டுமே படங்கள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பாகுபலி-2 படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் 5 முதல் 6 காட்சிகள் வரை திரையிட இரண்டு மாநில அரசும் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


0 comments:

Post a Comment