இது தெர்மோகோல் படம் கிடையாது - கலாய்த்த கமல்
24 ஏப்,2017 - 17:58 IST
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தெறி எனும் சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். இயக்கம் தவிர, தற்போது சொந்தமாக பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள அட்லீ, தனது முதல் தயாரிப்பாக "சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.
ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். எம்ஆர்.ராதாவின் பேரன் ஐக் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் கமலிடம் உதவியாளராக பணியாற்றவர். த்ரில்லிங் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் கமல்ஹாசன் "சங்கிலி புங்கிலி கதவ தொற" படத்தின் இசையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "என்னோடு வேலை செய்த பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். ஐக், ஜீவா போன்ற மூன்றாம் தலைமுறை சினிமாக்காரர்களும் வந்துள்ளார்கள். உங்களுக்கு முன்னாடியே இப்படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம் யார் முதலில் படத்தை பார்ப்பது என சினிமா ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள். அதனால் தான் என்னவோ பைரசி அதிகமாக வருகிறது. இந்தப்படம் ஆவி வந்த கதை என்று சொன்னார்கள், நன்றாக கவர் பண்ணியிருக்கிறார்கள், தெர்மோகோல் மாதிரி இல்லை... நீங்கள் வேறு எதுவும் நினைத்து விடாதீர்கள் என்று காமெடியாக பேசினார்.
சில தினங்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் உள்ள நீர், ஆவியாகமால் தடுக்க தெர்மோகோல் மூலம் அடித்த காமெடி கூத்துகள் வலைதளங்களில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. நடிகர் கமலும் அதை மறைமுகமாக மேற்கோள் காட்டி "சங்கிலி புங்கிலி கதவ தொற" ஆடியோ விழாவை கலகலப்பாக்கினார்.
0 comments:
Post a Comment