Friday, April 28, 2017

'பாகுபலி-2'வுக்காக 500 டிக்கெட்டுகள் வாங்கிய கலெக்டர்..!


'பாகுபலி-2'வுக்காக 500 டிக்கெட்டுகள் வாங்கிய கலெக்டர்..!



28 ஏப்,2017 - 12:06 IST






எழுத்தின் அளவு:








இன்று உலகமெங்கும் 'பாகுபலி-2' படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது.. இந்தப்படத்தை முதல் நாளே பார்க்கவேண்டும் என்பதற்காக சுமார் 3 கி.மீ தூரம் க்யூவில் நின்று ரசிகர்கள் டிக்கெட் வாங்கிய அதிசயமெல்லாம் நடந்தது. வசதி படைத்த ரசிகர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு முதல்நாளே 'பாகுபலி-2' பார்ப்பது என்பது கானல் நீர்தான்.

ஆனால் தெலுங்கானாவில் உள்ள 'வாரங்கல்' மாவட்ட கலெக்டர் அமர்பலி கட்டா, தனது நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு 500 டிக்கெட்டுகள் மொத்தமாக வாங்கி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். வாரங்கல் மாவட்டம் எப்போதும் சுத்தமும் சுகாதாரமுமாக இருக்க வேண்டும் என நினைப்பவர் கலெக்டர் அமர்பலி. அதனால் அதற்கு உறுதுணையாக தனக்கு தோள் கொடுத்து நிற்கும் துப்புரவு பணியாளர்களை மற்றும் நிர்வாக ஊழியர்களை சந்தோஷப்படுத்த நினைத்த அமர்பலி, அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த 'பாகுபலி-2' சிறப்பு காட்சியை பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்களாம்.


0 comments:

Post a Comment