Wednesday, April 26, 2017

‘ஜெயா ஆவி தெர்மாகோல்; சரவணா ஸ்டோர் ஓனர்…’ கலாய்த்த ராதாரவி


Radharavi funny speech about Thermocol and Saravana Store Ownerஅட்லி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.


இப்படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரன், ஐக் இயக்கியுள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா கலந்துக் கொண்ட ராதாரவி வழக்கம்போல கலாய்த்து பேச ஆரம்பித்தார்.

அவர் பேசியதாவது…

‘கமல் இங்கே பேசும்போது ஆவி படங்கள் மற்றும் தெர்மாகோலை பற்றி பேசினார். அவர் சொன்னதை நானும் நினைச்சேன்.

அந்த தெர்மாகோலை அந்த அம்மா (ஜெயலலிதா) மேல போட்டிருந்தா, அவங்க ஆவி போயிருக்காது. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல.

இந்த ஐடியா அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஏன் அப்பவே தோனலை.?

இதை நான் சொல்ல காரணம். நான் அந்த அம்மாவை நம்பிதான் இருந்தேன்.

அரசியல் சினிமா போல இப்ப எல்லாம் வாரிசு சீசன்தான்.

விளம்பரத்துல சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஆடும்போதே அவர் சினிமாவுக்கு வருவார்ன்னு நினைச்சேன்.

ஹ்ம்… இப்போ சினிமா கெட்டுப்போச்சி.

நான் இப்படி பேசினா, அவராலதான் சினிமா கெட்டுப்போச்சுன்னு ராதாரவி சொன்னார்னு தலைப்பு செய்தியில போட்டுருவாங்க.

அவரு குறைஞ்ச விலையில பொருள் கொடுத்துட்டு வர்றாரு. அதை கெடுத்துடாதீங்க’ என்றார்.

குறிப்பு : சினிமாவில் சரவணா ஸ்டோர் ஓனர் நடிக்கவில்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ராதாரவி இப்படி கிண்டலடித்து பேசியதால், அவர் சீக்கிரமே சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியத்திற்கில்லை.

Radharavi funny speech about Thermocol and Saravana Store Owner

0 comments:

Post a Comment