தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகர் விணு சக்கரவர்த்தி. தமிழில் மட்டுமே 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் இவர்.
கவர்ச்சி புயல் நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் இன்று இரவு விணு சக்கரவர்த்தி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்காந்த் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்துடன் அதிசய பிறவி, குரு சிஷ்யன், அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில நடித்துள்ளார்.
விணு சக்கரவர்த்தி பற்றிய சில குறிப்புகள்…
மதுரை மாவட்டம் உசிலபட்டி மேலப்புதுர்ஆதிமூலத்தேவர், மஞ்சுவாணி தமபதியினருக்கு 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி மூத்தமகனாக பிறந்தவர் விணு சக்கரவர்த்தி.இவருடன் பிரேமகாந்தன் என்கிற தம்பியும், குண்டலகேசி என்கிற தங்கையும் பிறந்தனர்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லிபள்ளியில் படிக்கத் தொடங்கியவர், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழக்கத்திலும் பட்டப் படிப்பு படித்தவர்.
ஆரம்பத்தில் ஆறு மாதம் காவல்துரை அதிகாரியாக ஐஸ்ஹவுஸ் பகுதியில் பதவி வகித்தவர். தென்னகரயில்வேயில் நான்கு வருடங்கள் பணிபுரிந்த போது நாடகம் இலக்கியம் என்று நாட்டம் வரவே, அதில் ஈடுபட ஆரம்பித்தார்.
டான்ஸ் மாஸ்டர், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், யாரோ இவர் யாரோ போன்ற நாடகங்களில்தொடர்ந்து நடித்து வந்தார். மறைந்த கன்னட இயக்குனரும் எழுத்தாளருமான புட்டன்ன கனகலிடம் உதவியாளராக சேர்ந்த இவர், சினிமா பற்றி அவரிடம் தெரிந்து கொள்ளஆரம்பித்தார்.
1977-ல் திருப்பூர் மணி தயாரிப்பில் சிவக்குமார் நடித்த நூறாவது படமான ரோசாப்புரவிக்கைக்காரி படத்திற்கு திரைக்கதை எழுதி, அதில் ஒரு வேடத்திலும் நடித்து நடிகராகஅறிமுகமானார்.
மணிவண்ணன் இயக்கிய கோபுரங்கள் சாய்வதில்லை, பாரதிராஜா இயக்கிய மண்வாசனை ஆகிய இரு படங்களும் இவரது சினிமா வாழ்க்கையில் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் பேசதெரிந்த இவர், தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் முப்பது,தெலுங்கில் ஐந்து, படுக மொழியில் ஒரு படம் என நான்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
வண்டிச்சக்கரம், கோயில் புறா, இமைகள், பொண்ணூக்கேத்த புருஷன் போன்ற படங்களில்கதை, திரைக்கதை, வசனம் எழுதி இனை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகைசில்க் ஸ்மிதாவை பெயர் வைத்து சினிமாவுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.
இவருக்கு கர்ணபூ என்கிற மனைவியும், சண்முகப் பிரியா என்கிற மகளும், சரவன ப்ரியன் என்கிற மகனும் உள்ளனர். சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.
Rajinikanth and Vijayakanth Condolences to actor Vinu Chakravarthy death
0 comments:
Post a Comment