'ஸ்பைடர்' கிளைமாக்ஸ் மாற்றம் ?
24 ஏப்,2017 - 15:31 IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் ஜுன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அடுத்த சில நாட்களுக்குள் படம் ஜுன் மாதம் திட்டமிட்டபடி வெளிவராது என்றும் படத்தின் வெளியீடு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே, படத்தின் தாமததத்திற்கான காரணம் படத்தின் கிளைமாக்ஸ்தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. 'ஸ்பைடர்' படத்திற்காக முருகதாஸ் எழுதி வைத்திருந்த கிளைமாக்ஸ் காட்சியின் ஒரு பகுதி சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் வந்துவிட்டதாம். அதனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது அவர் மாற்றி எழுதி வருகிறாராம். அது திருப்தியாக வந்தபின்தான் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க உள்ளார்கள் என்று சொல்கிறார்கள். அதனால்தான் திட்டமிட்டபடி படத்தை ஜுன் மாதம்வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எடுத்த படங்களின் கதைகள் சர்ச்சைக்குள்ளான கதைகள் தான். அவர் தமிழில் கடைசியாக இயக்கிய 'கத்தி' படம் கூட வேறொருவரின் கதை என பரபரப்பான சர்ச்சை எழுந்தது. அது மட்டுமல்ல அவருடைய அனைத்து படங்களின் கதைகளுக்கும் வேறொருவர்தான் சொந்தக்காரர் என இயக்குனர் பிரவீன்காந்த் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அதுதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
0 comments:
Post a Comment