Thursday, April 27, 2017

பாகுபலி-2 படத்துக்கு 15 நாட்கள் வசூல்


பாகுபலி-2 படத்துக்கு 15 நாட்கள் வசூல்



27 ஏப்,2017 - 17:57 IST






எழுத்தின் அளவு:








2015-ல் வெளிவந்த 'பாகுபலி' படம் வசூலில் இந்திய சினிமா வரலாற்றின் கடந்தகால சாதனைகளை முறியடித்தது. இந்தியாவிலேயே மிக அதிகமான வசூலை அள்ளிய இந்தியத் திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது. இப்போது பாகுபலி படத்தின் 2ஆம் பாகமும் வெளியீட்டுக்கு முன்பே புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் உலகமெங்கும் வெளியாகும் 'பாகுபலி 2' படத்திற்கான முன்பதிவுகள் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் 'பாகுபலி 2'வுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், அமீர்கானின் 'தங்கல்' பட ரெக்கார்டையே முறியடித்துவிட்டதாக பாலிவுட் வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகமெங்கும் கிட்டத்தட்ட 8000 திரையரங்குகளில் 'பாகுபலி 2' வெளியாவதால், படத்தின் முதல் 4 நாட்களிலேயே மிகப்பெரிய தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரவிடுமுறை, மே 1ஆம் தேதி அரசு விடுமுறை தொடர்ந்து கோடை விடுமுறை காரணமாக ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு மே 5 ஆம் தேதி பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் 15 நாட்கள் பாகுபலி-2 படத்துக்கு வசூல் குறையாது.


0 comments:

Post a Comment