மீண்டும் சீன படத்தில் திஷா பதானி
29 ஏப்,2017 - 13:05 IST
இந்திய - சீன கூட்டு தயாரிப்பாக, ஜாக்கி ஜான் நடிப்பில் வெளிவந்த குங்கு பூ யோகா படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வரும் திஷாவுக்கு, மீண்டும் ஒரு சீன படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜங்க் லீ இயக்கும் புதிய படத்தில் திஷா நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து திஷா கூறியிருப்பதாவது... "இது ஒரு ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது, நானும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக என்னை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். புதியவர் ஜங்க் லீ என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். குங்கு பூ யோகா படத்தில் என் நடிப்பை பார்த்து தான் இந்த வாய்ப்பு வந்துள்ளது. குங்கு பூ யோக இயக்குநர் ஸ்டான்லி டோங்கும் என்னை சிபாரிசு செய்தார். 75 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர். சில ஹிந்தி படங்களில் நான் பாட வேண்டியிருப்பதால் கால்ஷீட்டை தேதியை குறைக்கும்படி கேட்டுள்ளேன்" என்றார்.
0 comments:
Post a Comment