கொச்சி மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 'பாகுபலி-2' வெளியாவதில் சிக்கல்..!
26 ஏப்,2017 - 16:42 IST
பிரமாண்ட படம் என்றாலே படம் ரிலீசாவதற்குள் பல சிக்கல்களை சந்தித்துத்தான் வெளியாகவேண்டும் போல இருக்கிறது.. கடந்த சில நாட்களாக கன்னடத்தில் 'பாகுபலி-2' ரிலீஸாக விதிக்கப்பட்ட தடையை விளக்க போராடியது 'பாகுபலி-2' படக்குழு.. சத்யராஜ் மன்னிப்பு கேட்க ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது.. அடுத்ததாக ஆன்லைனில் மோசடி இணையதளம் மூலமாக பாகுபலி டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட விவாகரம் நேற்று முன் தினம் கிளம்பியது..
அது பற்றிய முடிவு தெரிவதற்குள் இப்போது கொச்சி மல்டிபிளக்ஸ் எனப்படும் கொச்சியில் உள்ள பி.வி.ஆர் காம்ப்ளக்ஸில் பாகுபலி-2' திரையிடப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஊரெங்கும் 'பாகுபலி-2' டிக்கெட் ஆன்லைன் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னும் பி.வி.ஆர் சினிமாவில் புக்கிங் துவக்கப்படவில்லை. படங்களை திரையிடுவதில் தியேட்டர்கள் பங்கு சதவீதம் எவ்வளவு என்கிற முடிவு எட்டப்படாததால் இன்னும் புக்கிங் துவங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அனேகமாக இன்று இரவுக்குள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என தியேட்டர் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
0 comments:
Post a Comment