வருகிற மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
அன்றைய தினத்தில் சிவா இயக்கியுள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
மேலும் அவரது ரசிகர்களை மகிழ்விக்க தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.
சென்னையில் ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் ஜெயா டிவியும் அஜித் ரசிகர்களுக்காக சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பரப்ப உள்ளது.
ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தினங்களில் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய 3 படங்களை ஒளிப்பரப்ப உள்ளனர்.
Jaya TV and famous Theatres have special programs on Ajith Birthday
0 comments:
Post a Comment