Thursday, April 20, 2017

தனுஷின் அடுத்த ஆறு படங்களின் தகவல்கள்

dhanush artதனுஷ் முதன்முறையாக இயக்கிய பவர் பாண்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.


தற்போது தனுஷ் நடிப்பில், சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.


இதனையடுத்து, வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை மற்றும் கௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இவற்றைத் தொடர்ந்து, வருகிற மே மாதம் முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.


பாலாஜிமோகன் இயக்கும் மாரி 2 படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நடிக்கவிருக்கிறார்.


இதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் அக்டோபர் மாதத்தில் நடிக்கவிருக்கிறார்.


இதனிடையில் மற்ற படங்களில் நடிக்கவோ, படத்தை தயாரிக்கவோ தனுஷ் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Actor Dhanushs next 6 movies updates

0 comments:

Post a Comment