3 சிறுவர்கள் பற்றிய கதையை இயக்கும் பேரரசு
21 ஏப்,2017 - 11:27 IST
விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களை வைத்து ஊர்களின் பெயர்களில் சில ஹிட் படங்களை இயக்கியவர் பேரரசு. வந்த வேகத்தில் சிக்சர், போர் என்று மட்டையை சுழற்றி சுழற்றி அடித்த பேரரசுவின் வேகம் திடீரென்று குறைந்து விட்டது. அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப்பிறகு திகார் என்ற படத்தை இயக்கியவர், அடுத்த மாதம் தனது புதிய படத்தை தொடங்கப்போவதாக கூறுகிறார். ஆனால் அந்த படத்தில் இதற்கு முன்பு அவர் படங்களில் நடித்தது போன்று முன்னணி நடிகர்கள் நடிக்கவில்லையாம். மூன்று சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். அதனால் இந்த படத்திற்கு எந்த ஊரின் பெயரை வைக்கலாம் என்று கதையைவிட டைட்டீலுக்காக அதிகம் மெனகெடுகிறார் பேரரசு.
0 comments:
Post a Comment