விஜய் பிறந்தநாளில் விஜய் 61 பட பர்ஸ்ட் லுக்
22 ஏப்,2017 - 18:35 IST
தெறி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணி இணைந்துள்ள படம் தற்போது போய் கொண்டிருக்கிறது. விஜய் உடன் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் வடிவேல், கோவைசரளா, சத்யன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளிராமசாமி தயாரிக்கிறார். இது தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படம் என்பதால் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது.
விஜய்யின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இன்று தலைப்பு உறுதியாகவில்லை. அதனால் விஜய்-61 என்றே படத்தை குறிப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல்பார்வையை வருகிற ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இசை வெளியீடும், அக்டோபரில் படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
0 comments:
Post a Comment