24 லட்சத்துக்கு பெட்ஷீட் வாங்கி மோசடி: ஷில்பா ஷெட்டி மீது புகார்
29 ஏப்,2017 - 10:42 IST
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கும் ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து ஈவெண்ட் மானேஜ்மென்ட் நிறுவனம் நடத்துகிறார். இதன் மூலம் நட்சத்திர இரவு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை தொழில் அதிபர் ரவி பஹடோல்யா என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார். அவர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பெட்ஷீட்களை தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் மூலம் விற்றுத் தருவதாக கூறி 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெட்ஷீட்களை வாங்கினார்கள். நிகழ்ச்சிகளில் அதை விற்கவும் செய்தனர். ஆனால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எங்களுக்கு 24 லட்சத்தை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற புகார் மனுவில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி மீதும், அவரது கணவர் மீதும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment