இனிய நண்பரே... வினோத் கண்ணாவுக்கு ரஜினி இரங்கல்
27 ஏப்,2017 - 15:35 IST
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா இன்று(ஏப்.,27-ம் தேதி) மரணம் அடைந்தார். நடிகர், தயாரிப்பாளர் மட்டுமல்லாது எம்பியாகவும் இருந்த வினோத் கண்ணா மறைவுக்கு திரைபிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும், வினோத் கண்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛இனிய நண்பரே, உங்களை இழந்து நான் தவிக்கிறேன். குடும்பத்தாருக்கு என் இதயப்பூர்வமான இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment