Wednesday, April 26, 2017

தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் 'பாகுபலி 2'


தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் 'பாகுபலி 2'



26 ஏப்,2017 - 10:58 IST






எழுத்தின் அளவு:








'பாகுபலி 2' படத்தின் வெளியீட்டுச் சர்ச்சை தமிழில் இந்த வாரமும் தொடர்ந்து இப்போதுதான் முடிவுக்கு வந்தது. கடந்த சில நாட்களாகவே படம் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. ஒரு வழியாக அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் 'பஞ்சாயத்து' செய்து வெற்றிகரமாக முடித்துவிட்டார்களாம். அதனால், படம் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகிவிடும்.

இருந்தாலும் தமிழ் ரசிகர்களை 'பாகுபலி 2' ஏமாற்றிவிட்டது. ஆம், 'ஐமேக்ஸ்' என்ற பிரம்மாண்டத் திரையிடல் மூலம் தமிழ் 'பாகுபலி 2' படத்தை தமிழ் ரசிகர்கள் ரசிக்க முடியாது. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே படத்தை 'ஐமேக்ஸ்' திரையிடல் மூலமும் உலகம் முழுவதும் திரையிட உள்ளார்கள். இது தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய ஏமாற்றத்தைத் தரும்.

'ஐமேக்ஸ்' என்பது அந்தக் காலத்தில் திரையிடப்பட்ட 70எம்எம் வகையான திரையிடல்தான். 1.89 : 1 என்ற விகிதத்தில் திரையிடப்படும் வடிவம்தான் ஐமேக்ஸ் திரையிடல் வடிவம். ஐமேக்ஸ் திரை என்பது சராசரியாக 22 மீட்டர் அகலமும் 16.1 மீட்டர் உயரமும் கொண்ட திரை. சென்னையில் லுக்ஸ் சினிமாஸ் காம்ப்ளக்சில் மட்டுமே ஐமேக்ஸ் திரையிடல் உள்ளது.

ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய வடிவங்களில் 'பாகுபலி 2' திரையிடப்பட உள்ளது.


0 comments:

Post a Comment