Thursday, November 24, 2016

சமூக வலைத்தளத்துக்கு குட்பை சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்


201611231551224635_lakshmi-ramakrishnan-good-bye-to-social-media_secvpfலட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் விளங்கி வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலமும் இவர் பிரபலமானார்.


இவர் சமூக இணையதளங்களான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளத்தில் தான் நடித்து வரும் படங்கள் மற்றும் தன்னுடைய படத்தின் புரோமோஷன்களையும், நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட செய்திகளையும் பதிவிட்டு வந்தார்.


மேலும், ரசிகர்களுடனும் தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு வந்தார். இவரை சமூக வலைத்தளத்தில் நிறைய பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வலைத்தளத்தில் இவரது நிகழ்ச்சியை கிண்டல் செய்து பலரும் பலவிதமான முறையில் பதிவிட்டு வந்தனர்.


இது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இந்நிலையில், இன்று முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுவரை, தனக்கு ஆதரவு கொடுத்தவர்கள் நன்றி. மேலும், என்னை காயப்படுத்தியவர்களுக்கும், அவமானப்படுத்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றுள்ளார்.


லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த முடிவுக்கு பலர் ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், ஒரு சிலர் வரவேற்பும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment