நடிக்கும் போதே என் உயிர் போக வேண்டும் - த்ரிஷா
24 நவ,2016 - 15:19 IST
சினிமாவில் நடித்து கொண்டிருக்கும்போதே தன்னுடைய உயிர் போக வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி இளம் நடிகைகள் வந்தாலும் கூட த்ரிஷா தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் மோகினி, சதுரங்க வேட்டை 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சினிமா தான் தன் மூச்சு, நடிக்கும்போதே என் உயிர் போக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி த்ரிஷா மேலும் கூறியிருப்பதாவது... ‛‛சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு, நடித்து கொண்டிருக்கும்போதே என் உயிர் போக வேண்டும், அது தான் எனது ஆசை. என்னுடைய பலமே சினிமா தான் என்பதாலோ என்னவோ எனது திருமணம் கூட நின்று விட்டது. நான் தொடர்ந்து நடித்து கொண்டு தான் இருப்பேன். கர்ப்பகாலத்தில் மட்டும் நடிப்புக்கு இடைவெளி விடுவேன், மற்றபடி எப்போதும் சினிமாவில் நடித்து கொண்டே இருப்பேன்.
இவ்வாறு த்ரிஷா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment